பொட்டி தட்டும் சகோதர சகோதரிகளுக்கு ...
வேலை : பொட்டி தட்டுவது
பக்க விளைவு : கழுத்து வலி, முதுகு வலி
கணினி வேலை செய்யும் அணைத்து சகோதர சகோதரிகளுக்கும் பொதுவான ஒரு பிரச்சினை கழுத்து வலி மற்றும் முதுகு வலி.
அலுவலகத்தில் அவ்வளவாக தெரியாத வலி , வீட்டிற்கு வந்த பிறகு அதிகரிக்கும்.
சிலர் தலையணை இல்லாமல் கூட படுக்க வேண்டி இருக்கும்.
இந்த வலியை போக்க யோகாவில் சில முறைகள் உள்ளன . மிகவும் எளிய முறைகளை பின்பற்றி மேற்கூறிய வலிகளை போக்கலாம். நான் அனுபவபூர்வமாக உணர்ந்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
நாம் பின்பற்ற இருக்கும் இரண்டு ஆசனங்கள் : வஜ்ராசனமும் சுகாசனமும் மட்டுமே.
முதலில் சுகாசனம் மற்றும் அதன் செய்முறை :
முதல் பயிற்சி :

சாதாரணமாக சம்மணமிட்டு அமர்ந்து கொள்ளவும். இதுவே சுகாசனம். உடல் நேராக நிமிர்ந்து இருக்க வேண்டும். இப்போது வலது உள்ளங்கையால் தொப்புளை மூடிக் கொள்ளவும். இடது கையால் வலது காதைத் தொட்டபடி ஆழமாக மூச்சை இழுத்து மெதுவாக வெளிவிடவும். இதனையும் ஐந்து முறை திரும்பத் திரும்பச் செய்ய வேண்டும். மூச்சை வெளியிடுதலும் மூச்சை உள்ளிழுத்தலும் தடைப்படாமல் ஒரே சீராக நடைபெற வேண்டும்.
இரண்டாம் பயிற்சி :

இடது உள்ளங்கையால் தொப்புளை மூடிக் கொள்ளவும். வலது கையால் இடது காதைத் தொட்டபடி ஆழமாக மூச்சை இழுத்து மெதுவாக வெளிவிடவும். இதனையும் ஐந்து முறை திரும்பத் திரும்பச் செய்ய வேண்டும்.
மூன்றாம் பயிற்சி :

இடது உள்ளங்கையால் வலது காதைத் மூடிக் கொள்ளவும். வலது உள்ளங்கையால் இடது காதைத் மூடிக் கொள்ளவும். ஆழமாக மூச்சை இழுத்து மெதுவாக வெளிவிடவும். இதனையும் ஐந்து முறை திரும்பத் திரும்பச் செய்ய வேண்டும்.
நான்காம் பயிற்சி :

இடது உள்ளங்கையால் இடது காதைத் மூடிக் கொள்ளவும். வலது உள்ளங்கையால் வலது காதைத் மூடிக் கொள்ளவும். ஆழமாக மூச்சை இழுத்து மெதுவாக வெளிவிடவும். இதனையும் ஐந்து முறை திரும்பத் திரும்பச் செய்ய வேண்டும்.
அடுத்து வஜ்ராசனம் செய்யும் முறை :
படத்தில் காட்டியபடி அமர்ந்துகொள்ளவும் . மூச்சை ஆழமாக உள்ளே இழுத்துக் கொள்ளுங்கள். பிறகு மூச்சை மெதுவாக வெளியேற்றியவாறு முன்புறம் குனியுங்கள். முடிந்தவரை குனியுங்கள். சிறிது விநாடிகள் கழித்து இப்போது மெதுவாக மூச்சை உள்ளிழுத்தபடி நிமிர்ந்து பழைய (அமர்ந்த) நிலைக்கு வர வேண்டும்.
இதனை ஐந்து முறை திரும்பத் திரும்பச் செய்ய வேண்டும். அவசரமின்றி பதட்டமின்றி நிதானமாகக் கண்களை மூடியபடி செய்யலாம். குனியும் போது மூச்சை வெளியிடுதலும் நிமிரும் போது மூச்சை உள்ளிழுத்தலும் ஒரே சீராக நடைபெற வேண்டும்.
மேற்கூறிய பயிற்சிகள் உங்களுக்கு கண்டிப்பாக புத்துணர்ச்சி அளிக்கும்.
20 -30 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளும் இந்த பயிற்சிகளை , காலையோ அல்லது மாலை நேரத்திலோ செய்யலாம்.
கூகிள் தேடுபொறியில் “யோகாசனா” என்றோ “வஜ்ராசனா” என்றோ தேடிப் பாருங்கள். உங்களுக்கு நிறைய செயல் முறை விளக்கங்கள் கிடைக்கும் .
